அவள் என்னை பொறுக்கி என்றாள் ஆம் நான் பொறுக்கி கொண்டு தான் இருக்கிரேன் எங்கும் சிதறி கிடக்கும் அவளின் நினைவுகளை
உன் கண்களில் முழ்கி மூர்ச்சித்துப்போன என் உயிரை உன் இதயத்தில் புதைத்து விடு
அவளது
பவுடர் கன்னத்தில் இருக்கும்
கரும்புள்ளி (மச்சம் )கூட
பெளவுர்னமி நிலவே
என்றோ வேக போகிற
உடம்பிற்கு
இன்று உன் நினைவுகளால் வேகிற ஒத்திகை
அவள் முகம் பார்க்கும்
கண்ணாடியின் ஓரத்தில்
ஒரு பொட்டு அவளது
கண்ணே பட்டு
விடக்க கூடாது என
உன் கை கடிகாரம் போலதான்
என் இதயமும் ஒவ்வொரு
நொடியும் நீ பார்க்கவே
துடிக்கிறது
எந்தன் நாளில்
உன்னுடன் கழித்து
மிச்சமான பொழுதுகளும்
உன்னயே தேடுகின்றன
இருநாள் உன்னை கானாமல்
இருவிழிகள் உறங்கவில்லை
மறுநாள் உன்னை கண்டு
மனமானது பூச்சென்டு
உன் விழிகளில்
என்னைக் கண்டு
தெரிந்து கொண்டேன்
காதல் நிகண்டு
ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கும் போது கண்களால் கொலைசெய்து விட்டு இதழ்களால் நலம் விசாரிக்கிறாய்
ரூபன் சத்யா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.